அலை தவழும் - கோடியக்கரை சுற்றுலா


புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி அமைந்திருக்கிறது மணமேல்குடி (கோடியக்கரை) கடற்கரை. 

இது நாகப்பட்டினம் கோடியக்கரையல்ல, புதுக்கோட்டையில் இருக்கிற கோடியக்கரை. மணமேல்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ஒரு தார்ச் சாலை செல்கிறது. அந்தப் பாதையை அப்படியே பிடித்துச் சென்றால் சிறிது தூரத்தில் முந்திரி, தைலமரக்காடுகள் நம் கண்ணிற்குத் தென்படுகின்றன. அப்படியே இன்னும் சற்று தூரத்தைக் கடந்ததும் கடற்கரையையொட்டி வந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் கடற்கரைக் காற்று நம்மைக் குளிர வைக்கிறது.
மணமேல்குடி  
கோடியக்கரை

மணமேல்குடி கோடியக்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். இயற்கைக் காற்றினை சுவாசித்தவாறு தொடர்ந்து சென்றால், கடற்கரையின் ஓரத்தில் அமர்ந்தவாறு மீனவர்கள் வலைகளைப் பிரித்தெடுத்தடுத்தல், படகினைத் தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து சிறிது தூரம் கடந்தால், கோடியக்கரை கடற்கரையினை நாம் ஏரியல் வியூவில் நாம் கண்டு ரசிக்கலாம். கடற்கரையையொட்டி, விநாயகர் கோயில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் இறங்கினால், அலைகள் நமது காலை வருடிச் செல்கின்றன. பெரிதாக அலைகள் இல்லை. காலை நனைத்த உடனே, குளித்துவிட்டுச் செல்வோம் என்ற மனநிலை ஏற்பட்டு விடுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments