புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராயமுத்துகுமார், முன்னாள் தலைவர் ராமதாஸ், தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் மாநில கூட்டமைப்பின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் ெகாடுக்கப்பட்டது. முடிவில், சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments