காரைக்குடியிலிருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

 
நாகூர்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர், நாகை எம்.பி எம்.செல்வராஜுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக தினசரி இரவுநேர விரைவு ரயிலை சென்னைக்கு இயக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக பகலில் தினசரி விரைவு ரயிலை இயக்க வேண்டும்.

வேளாங்கண்ணியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி விரைவு ரயிலை இயக்க வேண்டும். திருச்சி கோட்டத்தில் திருச்சியைத் தவிர வேறு எங்கும் ரயில் பெட்டிகளை பராமரிக்க பணிமனை இல்லாததால், நீண்ட தூர விரைவு ரயில்களை காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து இயக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சில ரயில்களை காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிக்கவும் முடியவில்லை. எனவே, திருவாரூரில் பராமரிப்புப் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் முதல் அஜ்மீர் வரை வாராந்திர விரைவு ரயிலை இயக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments