ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு!ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அறந்தாங்கி மாவட்ட கல்வி அதிகாரி ராஜராமன் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின் போது பள்ளியில் அரசு கூறிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுதல், கணினி ஆய்வகம், வகுப்பறை தூய்மை, கழிப்பறை தூய்மை, பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றை ஆய்வு செய்தார். 

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தங்கள் வீட்டில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவதன் அவசியம் சார்ந்தும் அறிவுரைகளை வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments