கனமழை எதிரொலி - புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவம்பர் 03) பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,   புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
 
மேலும், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments