தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் 6-ம் தேதி விடுமுறை


தமிழகத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நவம்பர் 4,5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் நவம்பர் 6-ம் தேதியும் விடுமுறை  வழங்கப்பட்டுள்ளது.  நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments