புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு பட்டியல் வெளியீடு: 13 லட்சத்து 51 ஆயிரத்து 878 வாக்காளர்கள்



புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் மொத்தம் 13 லட்சத்து 51 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 2022-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கவிதாராமு நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 447 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 85 ஆயிரத்து 364 பெண் வாக்காளர்கள் மற்றும் 67 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 51 ஆயிரத்து 878 வாக்காளர்கள் 2022-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (19.03.2021-ன் படி) மொத்தம் 13 லட்சத்து 52 ஆயிரத்து 702 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தொடர் திருத்தத்தின்போது 1,282 ஆண் வாக்காளர்கள், 1,505 பெண் வாக்காளர்கள் சேர்த்து மொத்தம் 2,787 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 1,962 ஆண் வாக்காளர்கள், 1,647 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 3,611 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 857 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 942 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2022-ன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்காக வருகிற 13, 14, 27, 28-ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள், தனிவட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் 1 லட்சத்து ஆயிரத்து84 ஆண்களும், 1 லட்சத்து 510 பெண்களும், 19 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து613 வாக்காளர்களும், விராலிமலை தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து193 ஆண்களும், 1 லட்சத்து14 ஆயிரத்து218 பெண்களும், 15 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து25 ஆயிரத்து426 வாக்காளர்களும் உள்ளனர். இதேபோல புதுக்கோட்டை தொகுதியில் 1 லட்சத்து19 ஆயிரத்து33 ஆண்களும், 1 லட்சத்து24 ஆயிரத்து538 பெண்களும், 20 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து43 ஆயிரத்து591 வாக்காளர்களும், திருமயம் தொகுதியில் 1 லட்சத்து11 ஆயிரத்து238 ஆண்களும், 1 லட்சத்து16 ஆயிரத்து574 பெண்களும், 3 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து27 ஆயிரத்து815 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குடி தொகுதியில் 1 லட்சத்து6 ஆயிரத்து356 ஆண்களும், 1 லட்சத்து9 ஆயிரத்து683 பெண்களும், 4 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து16 ஆயிரத்து43 வாக்காளர்களும், அறந்தாங்கி தொகுதியில் 1 லட்சத்து17 ஆயிரத்து543 ஆண்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து841 பெண்களும், 6 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். 6 தொகுதிகளிலும் இளம்வாக்காளர்கள் 14 ஆயிரத்து941 பேர் உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments