19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!!தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
 
அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் நேற்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நேற்று 01.11.2021 காலை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவர்களை பூக்கள் தெளித்து இனிப்பு,லட்டு மிக்ஸர் கொடுத்து வரவேற்றனர். 
பிறகு மானவ, மாணவிகளை ஆசிரியர்கள் வெப்ப பரிசோதனை மூலம் உடல் வெப்பநிலை கண்டறிந்து பதிவேடுகளில் பதிவு செய்து பள்ளிக்குள் அனுமதித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் வீதம் கட்டம் போட்டு அனைவரும் முகக்கவசம் அணிந்து வகுப்பறையில் அமரச் செய்தனர். கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து நம்மை காத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி மாணவ மாணவிகளை இன் முகத்தோடு வரவேற்று நலம் விசாரித்து, ஆடல், பாடல் மூலம் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி ஆர்வத்துடன் பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்க வழிவகை செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments