புதுக்கோட்டையில் 14 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்! திருடன் கைது!!புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கணேஷ்நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை, பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

இந்த நிலையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர் கீரனூரை சேர்ந்த தேவராஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. மேலும் அவர் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனை வளாகம், கணேஷ்நகர், கீரனூர், டவுன், திருக்கோகர்ணம், வல்லாத்திராக்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 14 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments