புதுகையில் வருகிற 20-ந் தேதி நடைபெற இருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பு! கலெக்டர் கவிதாராமு தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கிட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 20-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இந்தநிலையில் மழையின் காரணமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments