பிளஸ்-2 துணைத்தேர்வு துணைத்தேர்வு எழுதிய புதுகை மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அ.பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், 

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், 

இலுப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியல்களை பெற்று கொள்ள தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வு மையத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments