திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்கலாம் - புதுகை கலெக்டர் அழைப்பு! 30-ந் தேதி கடைசி நாள்!!ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திருக்குறள் ஒப்புவித்தல் திறனாய்வு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்படும். பரிசு பெறுவதற்கான விதிமுறைகளானது, 1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் படித்தவராக இருத்தல் வேண்டும். 

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பதின்ம பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை இதற்குமுன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. 

திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். போட்டிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறைஅலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற தொலைபேசி எண்ணிலும், pdkttamilthai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments