புதுகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு! வருகிற 30-ந் தேதி கடைசி நாள்!!மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2021-2022-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மதிப்பெண் பட்டியல் 40 சதவீதம் குறையாமல் இருக்கவேண்டும், மாணவரின் உண்மைச் சான்றிதழ், வருமானச் சான்று நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வந்து விண்ணப்பிக்கவும். 

மேலும், பிளஸ்-2 வகுப்பிற்கு மேல் கல்வி பயிலும் மாணவர்கள் நேரடியாக www.scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார்அட்டை நகல், மதிப்பெண் பட்டியல் 40 சதவீதம குறையாமல் இருக்க வேண்டும், மாணவரின் உண்மைச் சான்றிதழ், வருமானச் சான்று நகல், கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்வி கட்டண ரசீது, புத்தக கட்டண ரசீது மற்றும் விடுதிகட்டண ரசீது ஆகியவற்றுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் வருகிற 30-ந் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments