அரசர்குளத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு!அறந்தாங்கி அருகே அரசர்குளத்தை சேர்ந்தவர் சேக் இஸ்மாயில். இவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்துள்ளார்.

இவரது மகன் முஹம்மது அஸ்மர் (வயது 4). சிறுவனும், அவரது தாத்தாவும் நேற்று சின்னபள்ளிவாசல் அருகே சாலையின் ஓரத்தில் சரக்கு வாகனத்தில் காய்கறி வாங்கி கொண்டிருந்தனர். 

அப்போது சுப்பிரமணியபுரத்தில் இருந்து அறந்தாங்கிக்கு அரசு டவுன் பஸ் வந்துள்ளது. பஸ் ஹோரன் சத்தம் கேட்டதும் சாலையின் மறுபக்கத்திற்கு சிறுவன் ஓடிவந்த போது பஸ்சின் முன் சக்கரத்தில் சிறுவன் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். 

இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments