ஸ்மார்ட் போனில் நெட் வசதி இல்லையென்றாலும் 'வாட்ஸ்அப் வெப்' பயன்படுத்தும் வசதி அறிமுகம்




இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எளிதான தொழில்நுட்பமாக உதவி வருகிறது வாட்ஸ்அப் செயலி. படங்கள், வாய்ஸ் மெசேஜ்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளவும் உதவி வருகிறது வாட்ஸ்அப். 

இந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷனை மொபைல் போன் மட்டுமல்லாது கணினி உட்பட நான்கு சாதனங்களை வாட்ஸ்அப் வெப் மூலம் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் இணைய இணைப்பு இல்லையென்றாலும் வாட்ஸ்அப் வெப் மூலம் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை பயன்படுத்த முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய அம்சத்தின் மூலம் அதிகபட்சம் 14 நாட்கள் வரையில், வாட்ஸ்அப் வெப் வசதியை ஸ்மார்ட் போனில் இணைய இணைப்பு இல்லையென்றாலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments