கீரமங்கலத்தில் கணவர் திருடி வந்த மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மனைவி
கீரமங்கலம் பகுதியில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போய் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் தனது வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிளுடன் சென்றுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி மோட்டார் சைக்கிள் யாருடையது என்று கேட்ட போது சரியான தகவல் சொல்லவில்லை. அதனால் தனது கணவர் எங்கோ திருடி வீட்டிற்கு கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் பற்றி கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். யாருடைய மோட்டார் சைக்கிள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments