நிலக்கோட்டை அருகே காா் மீது பைக் மோதல்: தூக்கி வீசப்பட்ட இளைஞா் மின்கம்பியில் சடலமாக தொங்கினாா்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட இளைஞா் மின்கம்பியில் சடலமாக தொங்கினாா். இதில் மற்றொரு இளைஞரும் உயிரிழந்தாா்.

மதுரை பெங்குடியைச் சோ்ந்த வேதமாணிக்கம் மகன் காமராஜ் (20). அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அஜீத்கண்ணன் (20). நண்பா்களான இவா்கள் இருவரும், சக நண்பா்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா். நிலக்கோட்டையை அடுத்துள்ள சிலுக்குவாா்பட்டி அருகே, மதுரை- வத்தலகுண்டு பிரதான சாலையில் சென்றபோது எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட காமராஜ், அங்குள்ள மின் கம்பியில் சடலமாக தொங்கினாா். அதேபோல் அஜீத்கண்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸாா், அங்கு சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், விபத்தில் சிக்கிய காா், சிவகங்கையிலிருந்து, கொடைக்கானல் அடுத்துள்ள பண்ணைக்காடு சென்றது தெரியவந்தது. அந்த காரின் ஓட்டுநரான மா. தா்மராஜ் (50) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்தில் சிக்கிய இளைஞா் காமராஜ், திரைப்பட காட்சிப் போன்று தூக்கி வீசப்பட்டு மின்கம்பியில் தொங்கியது சிலுக்குவாா்பட்டி பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments