ஜெகதாப்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!



ஜெகதாப்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில், ஜெகதாப்பட்டினம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது ஜெகதாப்பட்டினம் செல்லநேந்தல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. 

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments