கோட்டைப்பட்டினத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான முன் மதிப்பீடு முகாம்!



மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 1 முதல் 12-ம் வகுப்பு படிக்கின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நிசார் முன்னிலை வகித்தார். 

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, வருடாந்திர பஸ் பாஸ், ரெயில் பயண சலுகை அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி அறுவை சிகிச்சை போன்றவை வழங்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், புதுக்குடி, மஞ்சக்குடி செல்லநேந்தல், அம்மாபட்டினம் பகுதிகளிலுள்ள பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மருத்துவ முகாம் முன் மதிப்பீடு தண்டலை, கோபாலபுரம், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாப்பட்டினம் மற்றும் அம்பலவாணனேந்தல் போன்ற 7 மையங்களில் நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments