அறந்தாங்கி நகரில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து அடைத்த மாடுகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொகை 5 ஆயிரத்திற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் என அறிவிக்க கோரி அறந்தாங்கி நகராட்சி ஆணையரிடம் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
அறந்தாங்கி பகுதியில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிவதால் தொடர்ந்து வாகன விபத்துகளும் அதனால் பரிதாபமான உயிர் இழப்புகளும் நடந்துவருகிறது. எனவே பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து அப்புறப்படுத்துமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஒலிபெருக்கி மூலம் பொது அறிவிப்பு செய்து அதன்பின் நகர் பகுதியில் சுற்றி திரிந்த 88 மாடுகளை பிடித்து நகராட்சி பூங்கா சுற்றுச்சுவருக்குள் அடைத்து மாடுகளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து வருகின்றனர். பிடிக்கப்பட்ட மாடுகளை மீட்க வரும் உரிமையாளர்களிடம் ஒரு மாட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என அறிவித்து வசூல் செய்து வருகிறார்கள்.
பிடித்து அடைக்கப்பட்டுள்ள மாடுகளை உரியாளர்கள் 25ம் தேதி மாலை 6 மணிக்குள் அபராதம் செலுத்தி பெறவில்லை எனில் அனைத்து மாடுகளும் கும்பகோணம் கோசோலைக்கு கொண்டு செல்லப்படும் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாடுகளின் உரியாளர்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதை கருத்தில் கொண்டு 5 ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதில் ஆயிரம் ரூபாய் அபராதம் பெரும்படியும் மறுபடியும் அதே தவறு செய்யும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கும்படியும் மாடுகளை பொது இடங்களில் இருந்து பிடித்து அடைத்து அபராதம் விதிக்கும் முறையை வாரம் ஒருமுறை நடைமுறை படுத்தும்படியும் பிடிக்கப்பட்ட மாடுகளை அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ளாத மாடுகள் கும்பகோணம் கோசோலைக்கு கொண்டு செல்லப்படும் என ஒலிபெருக்கி மூலம் பொது அறிவிப்பு செய்து இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து அதன்பின் கும்பகோணம் கோசோலைக்கு கொண்டு செல்லும்படியும்
கோரிக்கை விடுத்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் த.மலையப்பன், இணைச்செயலாளர் முனைவர் முபாரக் அலி, பொருளாளர் கிரீன் முகம்மது, துணை செயலாளர் புவனா செந்தில், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் மற்றும் முகம்மது ரபீக் ஆகியோர் நகராட்சி ஆணையர் லீனா சைமன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் பரிசிலிப்பதாக தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.