தந்தை வழியில் தன்னலம் இல்லா சேவை செய்வேன்: அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் உறுதி!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி 9.10 மற்றும் 14 வார்டு மக்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு   தந்தை திருநாவுக்கரசர்  வழியில் தன்னலம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வேன் உறுதியளித்தார்.

அப்போது அவர்,அறந்தாங்கி சட்டமன்ற தேர்தலில் 31ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றிபெற செய்த மக்கள் வீடுதேடி நன்றி சொல்ல முடியவில்லை. பல கோரிக்கைகளோடு எதிர்பார்த்து இருக்கும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என் தந்தை திருநாவுக்கரசர் அறந்தாங்கி மக்களுக்கு தன்னலம் பாராமல் தேவைகளை பூர்த்திசெய்து நற்பெயர் பெற்றாரோ அதேபோல அவர்  வழியில் தன்னலம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மக்களின் கோரிக்கைகள் விரைந்து  நிறைவேற்ற இன்னும் சில நாட்களில் அறந்தாங்கி நகரில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகம் திறக்கப்படும் என பேசினார்.

இந்த குறைதீர் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் இரா.ஆனந்த், முன்னாள் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன். முன்னாள் சேர்மன் மாரியப்பன்,  அன்பழகன், முன்னாள் கவுன்சிலர்கள்  காசிநாதன், சுமதி சங்கர், சரோஜா, தேவி, ராமசாமி,  சுப்பையா, மனிதநேய ஜனநாயக கட்சி முனைவர் முபாரக் அலி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வீராசாமி, மாநில ஊடக பிரிவு கிருபாகரன், பஷிர் அலி, மாவட் கவுன்சிலர் சுப்ரமனியன், வட்டார தலைவர்கள் முத்து, முருகன், சரவணன், நகர துணைத் தலைவர் கரத்தே யோகேஸ்வர்ன், நகர பொதுச் செயலாளர் முரளி, மோகன், வட்டாச்சியர் காமராஜர், நகராட்சி ஆணையர் திருட்செல்வம், அறந்தாங்கி வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments