புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்பெருந்துறை ஊராட்சி ஆவுடையார்கோவிலில் குதிரை ஒன்று கடந்த சில மாதங்களாக ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி வருகிறது.
ஆவுடையார்கோவில் கடைவீதியில் பொதுமக்களையும், அம்பாள் புரம் பகுதி மக்களையும் பள்ளிகளின் அருகில் மாணவர்களையும், பொதுமக்களையும் ஆவுடையார்கோவில் வரும் சுற்றுலா பயணிகளையும் குடியிருக்கும் பொதுமக்களையும் கடித்து தினமும் குறைந்தது நான்கு ஐந்து நபர்கள் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். பலமுறை ஆவுடையார்கோவில் குடியிருப்பு பகுதிகளில் பலரையும் கடித்துள்ளது பலமுறை விரட்டி சென்று காலை தூக்கி போட்டு அவர்களை மடக்கி காயப்படுத்தியுள்ளது ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில்
பல பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இது சம்பந்தமாக பொதுமக்கள் பலர்
பலதுறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த பயனுமில்லை. கோவில் குதிரை என்ற அச்சத்துடன் கோவில் நிர்வாகத்தினரிடமும் புகார் கூறியுள்ளார்கள் ஆனால் இது கோவில் குதிரை அல்ல விசாரித்ததில் அறந்தாங்கி பகுதியில் இந்த குதிரையை வளர்த்த உரிமையாளர் இறந்த நிலையில் இது ஆதரவற்று நிற்பாதாகவும் தகவல்.
இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் ஆவுடையார்கோவில் வரும் சுற்றுலா பயணிகளையும் குடியிருக்கும் பொதுமக்களையும் ஆவுடையார்கோவில் மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உண்டு.
இதற்கான தீர்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் பல்வேறு மாணவச் செல்வங்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த குதிரையால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது .
இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
உடனடியாக தீர்வுக்கான அப்பாவி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.