மாதந்தோறும் உதவித்தொகை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு






மாதந்தோறும் உதவித்தொகை பெறும் வகையில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

மாதந்தோறும் உதவித்தொகை

தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும். ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பி.எச்டி. படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.

2021- 2022 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நவ.13 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இந்தத் தேதி, நவம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments