மணமேல்குடி அருகே இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து லேப்டாப், பணம் திருட்டு!



மணமேல்குடி அருகே மேலஸ்தானம் பகுதியில் இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து லேப்டாப், பணம் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மணமேல்குடியை அடுத்த மேலஸ்தானம் பகுதியில் நாராயணன் என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மையத்தை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்த லேப்டாப், பிரிண்டர் மற்றும் ரூ.92 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. 

இதுகுறித்து மணமேல்குடி போலீசில் நாராயணன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments