சேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்! சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு...சேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள பொன்னமங்கலத்தை சேர்ந்தவர் மதி (வயது 35). இவரும் அதே ஊரை சேர்ந்த வினோத் குமார் (30) என்பவரும் கடந்த 4-ந் தேதி பொன்னமங்கலத்தில் இருந்து மீமிசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சேமங்கோட்டை அரசநகரிப்பட்டினம் பிரிவு ரோடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து, படுகாயமடைந்த மதி மற்றும் வினோத்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணமேல்குடி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதியை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments