திருமயம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்!



திருமயம் ஒன்றியம், மணவாளன்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சமூக தணிக்கை ஆய்வு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். இதில் வட்டார வள அலுவலர் விஜயராகவன் மற்றும் ஒன்றிய அலுவலர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். 

ஊராட்சியில் நடைபெற்ற திட்டத்தின் பணிகள், செயல்பாடுகள் குறித்தும் புதிய பணிகள் எடுப்பது குறித்தும் ஆய்வு செய்தனர். பணிபுரியும் பணியாளர்கள் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்கள். 

கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments