நீர்நிலைகளுக்கு பள்ளி மாணவர்கள் செல்லக்கூடாது: புதுக்கோட்டை சிஐஓ அறிவுரை






கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் மாணவர்கள் அங்கு செல்லக்கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்படுவோரை தங்க வைப்பதற்காக அரசு பள்ளிகள் உட்பட 457 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 45 நரிக்குறவரின குடும்பத்தினரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியை இன்று (நவ.10)ஆய்வு செய்ததோடு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு உதவி செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

”பாதுகாப்பு மையங்களாக செயல்படும் அரசுப் பள்ளிகளின் சாவிகளை வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு, தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாதபடி பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கனமழையினால் குளம் உள்ளிட்ட நிர்நிலைகள் நிரம்பி வழிவதால் மாணவர்கள் செல்லக்கூடாது. இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

நீர்நிலைகளுக்கு பள்ளி மாணவர்கள் செல்லக்கூடாது: புதுக்கோட்டை சிஐஓ அறிவுரை


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments