அறந்தாங்கியில் டிசம்பர்-6-ல் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்ப்பாட்ட அறிவிப்பு:

     டிசம்பர் 6, 1992 அன்று இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் விதமாக பாசிச பயங்கரவாத சக்திகள் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜிதை தகர்த்து இந்த தேசத்தை கலவர பூமியாக மாற்றினர்.  
      வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் காவி பயங்கரவாத கும்பல் இன்று காசி, மதுரா போன்ற இடங்களிலுள்ள மற்ற இறை இல்லங்களையும் குறிவைத்து அதனை பாபரி மஸ்ஜித் பாணியில் இஸ்லாமிய சமூகத்திடம் இருந்து பறிக்க முயற்சி செய்கிறது. பாசிச சக்திகளால் குறிவைக்கப்படும் இறை இல்லங்களை பாதுகாப்பதும், இழந்த மஸ்ஜிதுகளை மீட்டு எடுப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தலையாய பொறுப்பாகும்.

     அந்த அடிப்படையில் பாசிச பயங்கரவாத சக்திகளோடு நேரெதிரே களமாடும் SDPI கட்சி நாடு முழுவதும் டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. நமது பகுதியில் வருகின்ற டிசம்பர் 6, திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு அறந்தாங்கி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

      பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாபரி மஸ்ஜிதை மீட்கும் முயற்சியில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு:
U.செய்யது அஹமது,
மாவட்ட தலைவர்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments