பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது துரித நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு



பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள், அமைச்சர், ஆணையர் பிறப்பித்த சில முக்கிய உத்தரவுகள் வருமாறு:-

* புதிதாக எந்த பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கக்கூடாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1,985 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. நிலுவையில் உள்ள பள்ளிகளின் கோப்பினை விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கீகாரம் வழங்கவேண்டும்.

* மாநிலத்தில் கல்வியில் பின்தங்கிய வட்டம் கண்டறியப்பட்டு, அங்கு படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாழ்க்கை திறன் திட்டம்' செயல்படுத்தப்பட இருக்கிறது.

* ஆசிரியர் தேர்வு வாரியத்தால், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வில் எந்த புகாருக்கும் இடமின்றி நடைபெறுவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் முழுகவனத்துடன் செயல்படவேண்டும்.

* பல மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பணியினை விரைவாக முடித்து, பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஜூன் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.

* பள்ளிகளில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் போலீஸ் நிலைய எண், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்:1098, உளவியல் ஆலோசனைக்கான உதவி எண்:14417 ஆகியவற்றை ஒட்டி வைக்கவேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments