மீமிசலில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் டிச.13 (நாளை) ஏலம்: ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு!மீமிசலில் சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் டிச.13 (நாளை) ஏலம் விடப்படுவதாக  ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பகுதி சாலைகள் மற்றும் கடைவீதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் ஊராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டடு, பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் இதுநாள் வரை உரிமை கோராத நிலையில் கால்நடைகளை நாளை 13.12.2021 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மீமிசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம நிர்வாகம் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்படும். 

ஏலம் எடுக்க விரும்புவோர் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்கலாம் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
செல்வம்
ஊராட்சி மன்ற தலைவர்
துனைத் தலைவர் & உறுப்பினர்கள்
மீமிசல் ஊராட்சி
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments