ரெங்கம்மாள்சத்திரம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்




அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள் சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவர் சுபாஷ்காந்தி உஷா தம்பதியினர் தங்களின் மகள் விஜய மகிழினியின் பிறந்த நாளையொட்டி அப்பள்ளியில் அரசின் தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க எண்ணினர். அதற்காக தங்களது சொந்தப்பணம் ரூ.50 ஆயிரத்தை அரசின் தன்னிறைவுத் திட்டத்திற்கு மாவட்ட கலெக்டரிடம் காசோலையாக வழங்கினர். மாவட்ட நிர்வாகமும், ரூ.1 லட்சம் அப்பள்ளிக்கு வழங்கியது. தற்போது ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. திறப்பு விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தார். இதில் கவிஞர் தங்கம்மூர்த்தி, மருத்துவர் சுபாஷ்காந்தி, அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோசப் ரோசாரியோ கில்பர்ட், பள்ளித்தலைமையாசிரியை மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments