முதியவரின் கையில் கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் திருட்டு
அறந்தாங்கி அருகே மூக்குடியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது 60). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுந்தரலிங்கம் நேற்று வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் வந்து சுந்தரலிங்கத்தை கத்தியால் கையில் குத்திவிட்டு, அவர்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.9 லட்சத்தை திருடி சென்று விட்டனர். படுகாயமடைந்த சுந்தரலிங்கம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலின் பேரில் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments