கறம்பக்குடியில் இருந்து திருவோணம் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது கைக்குழந்தையுடன் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்துள்ள கரிசவயல் பத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்(வயது 28). இவர், கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரராக தொழில் செய்து வருகிறார். முகமது காசிம் தனது மனைவி சபானாபர்வீன் மற்றும் 1 வயது கைக்குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு திருவோணம் வழியே தங்களது சொந்த ஊரான பத்துகாட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். காரை முகமது காசிம் ஓட்டினார். திருவோணம் அருகே ஊரணிபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது காசிம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வேகமாக காரை விட்டு கீழே இறங்கினார். இதனை தொடர்ந்து சற்று நேரத்தில் கார் மள,மளவென தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் காரில் இருந்த கணவன், மனைவி இருவரும் கைக்குழந்தையுடன் காரை விட்டு விரைவாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments