மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றார்
திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 35 கிலோ மாணவியர் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டாரம் செங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவி பார்கவி முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கம் வென்றார். பரிசு பெற்ற மாணவி பார்கவியை செங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments