அறந்தாங்கியில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு
அறந்தாங்கி பகுதியில் கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறந்தாங்கி பகுதியில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி நெல் பயிர்கள் வளர்ந்து உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் பொட்டாஷ் உரம் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தற்போது கதிர் பறிக்கும் நிலையில் உள்ள பயிர்களுக்கு பொட்டாஷ் உரம் மிக முக்கியம். 

இந்த உரம் போட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். இதனால் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரம் கிடைக்க வழிவகை செய்து பொட்டாஷ் உரம் தட்டுபாட்டை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லணை கால்வாய் பாசனத்தார்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments