கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்காவிட்டால் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தனது வாட்ஸ்-அப் குழுவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் எனது போலீஸ் குழுவும் உங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ரோந்து சென்று குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை அந்த சரக துணை போலீஸ் சூப்பிரண்டுக்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் போலீஸ் நிலையங்களை கண்காணிக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இது போன்ற போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த சரக துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments