திருவரங்குளம் மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
திருவரங்குளம் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறை சுகாதாரமின்றி இருப்பதை கண்டித்தும், பள்ளியில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகி நோய் பரவுவதை கண்டித்தும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டுள்ள நிலையில் இரும்பு தூண்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும். எனவே அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி, முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சரி செய்வதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments