வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு
கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் விசா தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பொன்று இன்று வெளியாகியுள்ளது.


அதன்படி இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பயணிப்போர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்போர் ஆகிய சர்வதேச பயணிகளுக்கான விமான சேவைகள் 2022 ஜனவரி இறுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விமான சேவை ரத்து டிசம்பர் 15,2021 வரை இருந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்புக்காக அது 2022 ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் சூழ்நிலை கருதி, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளிக்கும் சில சர்வதேச விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் நீரஜ் குமார் அறிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments