மணமேல்குடி-யில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது தொடங்கியது. இப்பயிற்சியானது ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உள்ள செயல்பாடுகளை விளக்கும் விதமாக 30 கேள்விகளை உள்ளடக்கி மதிப்பீடு செய்யும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம், ஆசிரியர் பயிற்றுனர்கள் முத்துராமன், அங்கயற்கண்ணி மற்றும் சிறப்பாசிரியர்கள் கோவேந்தன், மணிமேகலை, இயன்முறை மருத்துவர் செல்வகுமார் மற்றும் அனைத்து உயர் தொழிநுட்ப ஆய்வக தலைமையாசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments