படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை: புதுக்கோட்டை மண்டலத்தில் கூடுதலாக 9 அரசு பஸ்கள் இயக்கம்
படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தடுக்கும்பொருட்டு புதுக்கோட்டை மண்டலத்தில் கூடுதலாக 9 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கூடுதல் பஸ்கள் இயக்கம்

புதுக்கோட்டை மண்டலம் மற்றும் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால், பலர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.

இதனை தடுக்கும்பொருட்டும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் கூடுதலாக 9 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலாண் இயக்குனரின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டையிலிருந்து மருத்துவக்கல்லூரி, திருமயம், கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், கீரனூர், திருச்சி கல்லாக்கோட்டைக்கு கூடுதலாக 9 அரசு பஸ்கள் மூலம் குறுநடை இயக்கப்பட்டு வருகிறது.

படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை

அந்தவகையில் புதுக்கோட்டை-மருத்துவக்கல்லூரிக்கு 3 அரசு பஸ்கள் மூலம் 3 குறு நடைகளும், கந்தர்வகோட்டை-தஞ்சாவூருக்கு 1 பஸ் மூலம் 2 குறு நடைகளும், புதுக்கோட்டை-திருமயத்திற்கு 1 பஸ் மூலம் 1 குறு நடையும், தஞ்சாவூரிலிருந்து கல்லாகோட்டைக்கு 1 பஸ் மூலம் 1 குறு நடையும், கீரனூரிலிருந்து திருச்சிக்கு 2 அரசு பஸ்கள் மூலம் 2 குறு நடைகளும், புதுக்கோட்டை-கீரனூருக்கு 1 பஸ் மூலம் 1 குறு நடையும் சென்று வருகிறது. பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்குவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments