கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 19). ஐ.டி.ஐ. படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது தாயுடன் தகராறு செய்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோவமாக சென்றார். இந்த நிலையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் படுகாயம்

* ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி விஜயகுமாரி (45). இவர் தனது ஸ்கூட்டரில் ஊரிலிருந்து ஆலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லத்திராகோட்டையை சேர்ந்த தியாகராஜன் (27) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரி ஓட்டிவந்த ஸ்கூட்டரில் மோதியது.

இதில் படுகாயமடைந்த விஜயகுமாரியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தியாகராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை

*மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பங்கஸ் கவுடா (18) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் வலிப்பு நோயால் பங்கஸ் கவுடா அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments