தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம் சரிப் எழுதிய மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் டிச.18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். சரிப் எழுதி இருக்கும் மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும் என்ற நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கின்றது.
இந்த விழாவிற்கு நெப்டியூன் நிர்வாக இயக்குனர் ஆஸாத் தலைமை வகிக்கிறார். புதுக்கோட்டை சமஸ்தான அமைச்சர் பாலகிருஷ்ணன் சேர்வை துணைவியார் தமயந்திபாலகிருஷ்ணன், திவான் கலிபுல்லாவின் பேரன் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சமநிலை சமுதாயம் ஆசிரியர் ஜாபர் சாதிக் பார்கவி வரவேற்புரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் நூலினை வெளியிட்டு உரையாற்றுகிறார். திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி நூலினை பெற்றுக்கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மகேந்திரன், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை தாவுத் மியாகான், சமூக செயற்பாட்டாளர் ஓவியா, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், காங்கிரஸ் கட்சி இப்ராஹிம் பாபு, புதுக்கல்லூரி அப்துல் ரசாக், தமஜக பொது செயலாளர் ஆதி திராவிடர் இப்ராஹிம்சா, உள்ளிட்டோர் பங்கேற்று புத்தகத்தைப் பற்றி கலந்துரையாட உள்ளனர். புத்தகம் உருவான விதம் குறித்து கே.எம்.சரிப் விளக்க இருக்கிறார்.
நிகழ்ச்சியினை சரீப்ராஸிக் தொகுத்து வழங்குகிறார். சமூக உயிரோட்டம் ஆசிரியர் ரஹ்மத்துல்லா ஜமாலி நன்றி உரையாற்ற உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.