கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை! அறந்தாங்கி நகராட்சி நோட்டிஸ்!!



கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என அறந்தாங்கி நகராட்சி நோட்டிஸ் கொடுத்துள்ளது.

தமிழக அரசு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்படியும் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வழிகாட்டுதலில் கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100% தடுப்பூசி என்ற  இலக்கை நோக்கி திட்ட செயல்பாடுகள் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்திவரும் நிலையில் 75 சதவீத மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள். 
எனவே பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு 71 உட்பிரிவு (1)-ன் படி நியாயவிலை கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திருமன மண்டபம், திரையரங்கம், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், துணிக்கடைகள், கடைவீதிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஓட்டல்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தினை நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸில் கண்டவாறு தங்களின் வாடிக்கையாளர்களை நெறிமுறையோடு நடந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments