அறந்தாங்கியில் பள்ளி மாணவன் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததால் பரபரப்பு
அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள குரும்பகாட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கழிவறை சென்று விட்டு திரும்பி வந்தபோது உடல்கல்வி ஆசிரியர் விசாரணை நடத்தி அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் வலது காதில் ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாணவன் கன்னத்தில் ஆசிரியர் அறைந்த சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments