அன்னவாசலில் வாக்காளர் பெயர் இந்தியில் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை




ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தற்போது பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பேரூராட்சி வார்டு எண் 13-ல் புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 250-ல் அன்னவாசல் ஜெ.ஜெ.காலனியில் வசிக்கும் சின்னையா என்பவரது மகன் முத்தன் என்பவரது பெயர் இந்தியில் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர் இடம் பெற்றிருப்பது வாக்காளர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments