மீன்களை வளர்க்க மானியம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திடவும், மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்திட ஏதுவாக உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாட்டில் 100 எக்டேரில் செயல்படுத்திட மத்திய அரசால் ரூ.69.88 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்திட 1.5 எக்டேர் ஒதுக்கீடு செய்து பொதுப்பிரிவினருக்கு 1 எக்டேர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 0.5 எக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மேற்கொள்ளப்படும் செலவினம் (அதிகபட்சம்) ரூ.7 லட்சத்தில் (ரூ.2.80 லட்சம்) பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு செலவினம் (அதிகபட்சம்) ரூ.7 லட்சத்தில் (ரூ.4.20 லட்சம்) 60 சதவீதம் மானியமும் வழங்கும் திட்டம் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே லட்சுமிபுரம் முதல் வீதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments