பொன்னமராவதியில் அதிக விலைக்கு உரம் விற்ற கடைக்கு `சீல்'
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள உரக்கடைகளில் தாசில்தார் ஜெயபாரதி தலைமையிலான அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொன்னமராவதி காந்தி சிலை அருகே உள்ள ஒரு உரக்கடையில் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு தாசில்தார் ஜெயபாரதி சீல் வைத்தார். மேலும், உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments