ஹஜ் பயணம்: 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹஜ்-2022-க்கான தற்காலிக வழிகாட்டுதல்களில், பத்தி.4-ல் பகுதி மாற்றம் செய்து, தற்போது மும்பை இந்திய ஹஜ் குழுவானது, ஹஜ்-2022-க்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்பும் வயதான புனித பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகபட்ச வயது வரம்பினை ரத்து செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவிப்பு செய்ததில் தகுதியற்றவராக கருதப்பட்ட, 65 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தற்போது ஹஜ்-2022-க்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

70 வயது பூர்த்தியடைந்த அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரருடன் ஒரு துணைப் பயணி விண்ணப்பிக்கலாம்.

ஹஜ்-2022-க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான முழு செயல்முறையும் சவுதி அரேபிய அரசு மற்றும் இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கு உட்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments