வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்: அமைச்சர் மா. சுப்பிரமண்யன்




வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயம் என்று மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறியே இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பங்கெடுத்த மா. சுப்பிரமண்யன் பேசும்போது, “

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்தனர். நாளைமுதல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும். 

அபாயம் மற்றும் அபாயமில்லாத அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் வெளியில் வர வேண்டும். என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

ஒமைக்ரான் வேகமாக பரவும் என்பதால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாங்களை தவிருங்கள். கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில்ஈடுபட வேண்டாம்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிற மாநிலங்களுக்கு செல்வதை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, வெளிநாட்டு பயணிகள் தமிழகம் வரும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்புடைய நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களை தீவிரமாக கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்துதல். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10 ஆவது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரத்தை பதிவிட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பாதிப்புகள் கொண்ட நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காடு பேருக்கு உத்தேச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறி இருப்பது உறுதியான வெளிநாட்டு பயணிகள், மருத்துவ உதவிக்கு எண் 104 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments