புகையான் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு: வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு



அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெல் பயிர்களில் புகையான், எடபழம் குல நோய் பரவி வருகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன் உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் நாகுடி, மைவயல் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை நேற்று பார்வையிட்டனர். பின்னர் இந்த நோய்க்கு எந்த மருந்து தெளிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்கள். இந்த ஆய்வின் போது கல்லணை கால்வாய் பாசனத்தார் தலைவர் கொக்குமடை ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments